கோவை : 10 ஆண்டு ஆயுள் தண்டனை முடித்த முஸ்லிம் சிறைவாசிகளையும் தமிழின உணர்வாளர்களையும், மதபேதம், இனபேதம் பார்க்காமல் கருணை அடிப்படையில் சட்டமன்ற வைரவிழா ஆண்டில் விடுதலை செய்யக் கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் அருகில் 23.11.2012 வெள்ளிக்கிழமை மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே.எம்.சரீப் தலைமை தாங்கினார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் A.S. இஸ்மாயில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் நாசர் (முன்னால் எம்.எல்.ஏ) , திரைப்பட இயக்குனர் அமீர் அப்பாஸ், வேங்கை இப்ராஹிம், அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment