Sunday, November 4, 2012

"முஸ்லிம்களைப் பற்றி என்ன தெரியும்?"


முஸ்லிம்கள் இந்தியாவுக்கு அளித்துள்ள பங்களிப்பு பற்றியோ, அதன் வரலாறு பற்றியோ நோபல் பரிசு  பெற்றவரும் இந்திய வம்சாவளி எழுத்தாளருமான வி. எஸ். நைபாலுக்கு ஒன்றும் தெரியாது என்று பிரபல நாடகாசிரியர் கிரிஷ் கர்னாட் விமர்சித்துள்ளார்.

மும்பையில் 'உயிர்ப்பான இலக்கியம்' பற்றிய விழாக் கருத்தரங்கில் தன் அரங்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்த கிரிஷ் கர்னாட், பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்குச் சென்றதாகக் குறிப்பிட்ட நைபாலுக்கு இவ்வாறு எதிர்க்குரல் கொடுத்தார். நைபாலுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கும் அவர் ஆட்சேபணை செய்தார்.


இந்திய வம்சாவளி எழுத்தாளரும் நோபல் பரிசு வென்றவருமான நைபாலுக்கு இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. எனினும் கிரிஷ் கர்னாட் விமர்சித்தபோது நைபால் விழா அரங்கில் காணப்படவில்லை. நடிகர் நசிருத்தீன் ஷா அச்சமயம் உடனிருந்தார்.
"இந்தியா என்று வரும் போது, நைபாலின் எழுத்துகள் நம்பகத்தன்மை அற்றவையே" என்றார் கிரிஷ். "தான் படித்த, அறிந்த செய்திகளை அந்த ஆள் பொருட்படுத்துவதில்லை"
கிரிஷ் கர்னாட்டின் இந்தக் கருத்துக்கு விழா இயக்குநர் அனில் தர்க்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "கிரிஷ் தன் நாடக அனுபவங்களைப் பற்றித்தான் பேசியிருக்க வேண்டும். நைபாலுக்கு விருது அளித்தது பற்றிய அவருடைய ஆட்சேபக் கருத்துகள் சரியில்லாதவை. முதலாவதாக, நைபால் ஓர் இந்திய வம்சாவளியினரே. அந்நியரல்லர்.  மேலும் நைபாலுடைய மனைவி நாதிராவும் இரு பிள்ளைகளும் முஸ்லிம்களாக வளர்க்கப் பட்டவர்களே" என்றார் அனில் தர்க்கர்.  "முஸ்லிம் மன்னர்கள் இந்தியக் கோவில்களை கொள்ளையடித்ததைப் பற்றி நைபால் எழுதுவது முஸ்லிம் எதிர்ப்பு என்று ஆகாது" என்றும் அனில் தர்க்கர் சொன்னார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza