எண்பதுகளின் இறுதிகளிலும் அதற்குப் பின்பும் தமிழகம் மதக் கலவரத்தைச் சந்தித்து வந்தது. இந்த மதக் கலவரங்களுக்கு வித்திட்டது இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவாரத்தின் தமிழக அமைப்புகள்.
மேடைப் பேச்சுகளில் இஸ்லாத்தையும், இறைத் தூதர் நபிகள் நாயகத்தையும், முஸ்லிம்கள் அன்னையராகக் கருதும் நபியவர்களின் மனைவி யரையும், முஸ்லிம்களைப் பற்றியும் தரக்கு றைவாகப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தன இந்த அமைப்புகள்.
அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான் என்று பழகி வந்த தமிழக மக்கள் மத்தியில் விஷக் கருத் துகளை புகுத்தியதும் இதே சங்பரிவார அமைப்பு கள்தான். இதுபோன்ற பிரச்சாரங்கள் எல்லை கடந்த நிலையிலும், அரசாங்கமோ, அரசு இயந் திரமோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இத்தகைய அமைப்புகளுக்கு மறைமுகமாகவும் சில வேளை நேரடியாகவும் ஆதரவு கொடுத்து வந்தன.
இச்சூழலில் முஸ்லிம்களும் தங்களின் எதிர்வி னையைக் காட்டத் துவங்கினர். மறைந்த பழனி பாபா போன்றவர்கள் அரசியல் ரீதியாக சங்பரி வார அமைப்புகளை கடுமையாக, எதிர் கொண்டு வரம்பு மீறலுக்கு எதிராக வரம்பு மீறினர். சங்பரி வார அமைப்புகளுக்கு மேடைகள் தோறும் சாட் டையடி கொடுத்தனர்.
மத ரீதியான ஒப்பீடுகள், விமர்சனங்கள் என கடுமையான வாதங்களை பழனி பாபா போன்ற வர்கள் முன் வைத்தனர். பதிலுக்கு கருத்தியல் ரீதி யாக எதிர் கொள்ளத் திராணியற்ற சங்பரிவார அமைப்புகள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களை யும் கொச்சைப்படுத்தி பேசியதோடு மதக் கலவரங் களை உருவாக்கின.
மதப் பதட்டம் தமிழக மக்களின் அமைதியை பல ஆண்டுகளுக்கு குலைத்துக் கொண்டிருந்தன. சங் பரிவார அமைப்புகளை மேடைகளில் பேச விட்ட காவல்துறையினர் முஸ்லிம் தரப்பினருக்கு தடை விதித்தனர்; கடும் கட்டுப்பாடுகûளை விதித்தனர்; வழக்குகளைத் தொடுத்தனர்.
வினை விதைத்தவர்களை விட்டு விட்டு எதிர் வினையாற்றியவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது அரசாங்கம். அந்தப் பதட்டமான அசாதரணமான சூழ்நிலை கள் - முஸ்லிம்களின் அறிவுப்பூர்வமான, ஆக்கப் பூர்வமான சமூக, சமுதாய, அரசியல் நகர்வுக ளால், ஜனநாயக வழிமுறைகளால் மாற்றம் கண்டு, சில ஆண்டுகளாக தமிழகம் அமைதிக் காற்றை சுவாசித்து வரும் நிலையில் மீண்டும் மதக் கலவரத்திற்கான விதைகளை தூவத் தொடங்கியுள்ளன இந்துத்துவா சக்திகள்.
அதற்கான முன்னேட்டமாக அண்மையில் சென்னை புளியந்தோப்பிலும், சிவகங்கை மாவட் டம் இளையான்குடியிலும் நடந்த சம்பவங்களைப் பார்க்க முடிகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னை புளி யந்தோப்பு பகுதியில் இந்து முன்னணி அமைப் பின் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அதன் நிர்வாகிகளான முருகேசன், மனோகரன் என்ற இருவர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியும், முஸ்லிம்களை அவமதித்தும், முஸ்லிம் பெண் களை கேட்கக் கூசும் வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சித்தும் பேசியுள்ளனர்.
இது சென்னை முஸ்லிம்கள் மத்தியில் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது. இந்த பேச்சு குறித்த பின்னணியில் தெரிய வந்த விஷயம், இந்து முன்னணி கூட்டம் நடத்திய இடம் பொதுக் கூட்டத் திற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்ட இடம் என்பது! எப்படி இந்து முன்னணிக்கு மட்டும் இங்கே அனுமதி வழங்கியது காவல்துறை?
இதேபோல, கடந்த வாரம் இளையான்குடியில் பாஜக பொதுக் கூட்டம் நடத்தியிருக்கிறது. இதில் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, முஸ்லிம்களைக் கேவலப்படுத்தி பேசியி ருக்கிறார். சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லாஹ்வைப் பற்றியும் நான்காம்தர வார்த்தை களால் வசைபாடியுள்ளார்.
முஸ்லிம்களுக்கெதிரான ஹெச். ராஜாவின் இந்த மோசமான பேச்சுகளால் கொதிப்படைந்த முஸ்லிம்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை காட்டியுள் ளனர். இவரை பேசவிட்டு காவல்துறை வேடிக்கை பார்த்திருக்கிறது.
இளையான்குடியில் பாஜகவிற்கு அமைப்பே இல்லை என்கின்றனர் உள்ளூர் மக்கள். அப்படி யானால் உள்நோக்கத்தோடுதான் இந்தப் பொதுக் கூட்டம் நடந்திருக்கிறது.
இளையான்குடி, சென்னை புளியந்தோப்பு இரண்டுமே முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகள் என்பதால் திட்டமிட்டே மதப் பதட்டத்தை உருவாக்க இந்துத்துவா அமைப்புகள் முனைப்பு காட்டியுள்ளன என்பதை புரிந்து கொள்ள முடிகி றது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு கடுமையாக கண்காணிக்கப்படும் என்ற கருத்து பொது மக்கள் மத்தியில் இருப்பதைப் போலவே, ஜெயலலிதா ஆட்சியில் இந்துத்துவாவினர் ஆட் டம் போடத் துவங்கி விடுவார்கள் என்ற கருத்தும் இருக்கிறது. இதற்கு காரணம் இந்துத்துவா மீதான ஜெயலலிதாவின் மென்மையான போக்கு தான்!
ஜெயலலிதா இந்துத்துவா சார்ந்த சிந்தனை யாளராகவே தனிப்பட்ட முறையில் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் தமிழகத்தில் மதக் கலவரத்தை அனுமதிக்கப் போகிறாரா அவர் என்பதுதான் நம்முன் எழுந்துள்ள கேள்வி.
தமிழகத்தை மீண்டும் 1980களின் பிற்பகுதிக்கு இழுத்துச் சென்று தமிழக மக்களின் அமைதியை குலைக்கச் செய்ய துடித்துக் கொண்டிருக்கும் இந் துத்துவாவினருக்கு கடிவாளம் போட வேண்டியது முதல்வர் என்ற வகையில் ஜெயலலிதாவின் பொறுப்பு.
மதக் கலவரமா? மக்களின் அமைதியா? இதை முதல்வர்தான் தீர்மானிக்க வேண்டும்.
source: keetru
0 கருத்துரைகள்:
Post a Comment