Thursday, November 8, 2012

அஸாருத்தீன் மீதான வாழ்நாள் தடை சட்ட விரோதம் - நீதிமன்றம்!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முஹம்மது அஸாருத்தீன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் கிரிக்கெட் ஆடுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். அவருடன் சிக்கிய அஜய் ஜடேஜா,  மனோஜ் பிரபாகர் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 

15 ஆண்டு காலம் இந்தியாவிற்கு விளையாடியுள்ள அசாருதீன் 99 டெஸ்ட் போட்டிகளில் 6125 ரன்களும் 334 ஒரு தின போட்டிகளில் 9378 ரன்களும் எடுத்திருந்தார்

தடைக்குப் பின்னர்  அரசியல் களத்தில் இறங்கியுள்ள அஸாருத்தீன் மொராதாபாத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக உள்ளார். தன் மீதான வாழ்நாள் தடை நீக்க அஸாருத்தீன் கோரிக்கை விடுத்திருந்தார்.


சூதாட்டக்குற்றச்சாட்டின் கீழ் 2000ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அஸாருதீனுக்கு  விதித்திருந்த வாழ்நாள் தடையை  2006ம் ஆண்டு இத்தடை வாரியத்தின் அனுமதியின்றியே திரும்பப் பெறப்பட்டிருந்தது. இதையடுத்து சர்ச்சை கிளம்பியிருந்தது.

இந்நிலையில், அஸாருத்தீனுக்கு கிரிக்கெட்டில் வாழ்நாள் தடை நீடிப்பது சட்டவிரோதமானது என்று  ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அஸாருத்தீன் மீதான தடை திரும்ப பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்யுமெனில் மீண்டும் அஸாருத்தீனுக்கு தடை நீட்டிக்கப்படலாம்.

முன்னாள் வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் வழங்குகிற 1.5 கோடி ரூபாய் வருவாயும் அஸாருத்தீனுக்குக் கிடைக்க இத்தடை நீக்கம் மூலம் வழிவகை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza