கெய்ரோ:2-வது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமாவிற்கு எகிப்து அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து முஹம்மது முர்ஸியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் யாஸிர் அலி கூறியது: ஒபாமாவிடம் நம்பிக்கை இன்னமும் மீதமுள்ளது. அமெரிக்காவைப் போலவே எகிப்திய மக்களின் விருப்பங்களுக்கும் ஒபாமா ஆதரவாக இருப்பார் என்று நம்புகிறோம். ஒபாமாவுக்கு முஹம்மது முர்ஸி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதுவார். இவ்வாறு யாஸிர் அலி தெரிவித்தார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா, அதே ஆண்டு கெய்ரோ பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரை முஸ்லிம் உலகில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், ஃபலஸ்தீன், ஆப்கான் உள்ளிட்ட விவகாரங்களில் ஒபாமா மேற்கொண்ட நடவடிக்கைகள் முஸ்லிம் உலகில் அவர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
0 கருத்துரைகள்:
Post a Comment