Wednesday, November 28, 2012

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான அவதூறுகளை தடுத்த நிறுத்த வேண்டும் - மாநில செயற்குழுவில் தீர்மானம்



கடந்த 2012 நவம்பர் 19,20 ஆகிய தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஏ. ஹாலித் முஹம்மது, மாநில துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1. பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான அவதூறுகளை தடுத்த நிறுத்த வேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற பிரச்சாரம் கடந்த அக்டோபர் 10ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்டின் மீது களங்கம் விளைவிக்கும் அவதூறுகளை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இச்செயற்குழு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றது.


2. தருமபுரியில் தலித் கிராமங்களை எரித்த ஜாதி வெறியர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரியில் தலித் கிராமங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஜாதி வெறியர்களின் இந்த கொடூர செயலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கின்றது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கின்றது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமும், வீடிழந்த மக்களுக்கு வீடும் கட்டிக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசை செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.

3. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் இது விஷயத்தில் நீதி கிடைக்கப்பெறவில்லை. வரும் டிசம்பர் 6ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், போஸ்டர் பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

4. முஸ்லிம்களையும், அவர்கள் சார்ந்துள்ள இஸ்லாமிய மார்க்கத்தையும் தீவிரவாதமாக சித்தரிக்கும் படங்கள் தொடர்ந்து வெளியாகி முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகின்றது. இதுபோன்ற அடிப்படையில் படங்கள் வெளியிடுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. தொடர்ந்து இதுபோன்ற அடிப்படையில் படங்கள் வெளியிடும்பட்சத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்துவது என இச்செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. கடந்த 2007ம் ஆண்டு “கோவையை குண்டுவைத்து தகர்க்க சதி” என்ற அடிப்படையில் அப்பாவி இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தி உளவுத்துறை அதிகாரி ரத்தினசபாபதி பொய்வழக்கு போட்டார். இது பின்பு பொய்வழக்கு என SIT கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்தது. இதுவரை இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வெடிகுண்டு பொய்வழக்கு போட்ட இரத்தினசபாபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் டிசம்பர் 10ம் தேதி கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என இச்செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza