ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டு படைகள் வரும் 2014-ம் ஈண்டின் இறுதியுடன் வெளியேறிவிடும் என்று கூறப்பட்டுவரும் நிலையில், அதன் பின்னரும் சுமார் 10,000 அமெரிக்க ராணுவத்தினர் அங்கே தங்கியிருப்பார்கள் என்ற தகவல் வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ளது.
மேலும் சில வருடங்களுக்கு (ஆம், வருடங்கள்) தங்கியிருக்கவுள்ள இவர்கள், ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சி வழங்கவே தங்கியிருக்க வேண்டியுள்ளது என வாஷிங்டன் அறிவிப்பு கூறுகிறது. ஆப்கான் ராணுவத்துக்கு தற்போது பயிற்சிகளை அமெரிக்க ராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கி வருகிறது.
2014-ம்ஆண்டுக்குப் பின்னரும் அமெரிக்க ராணுவம் ஆப்கானில் தங்கியிருக்கும் என வெள்ளை மாளிகை இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், இந்த செய்தி நேற்று (திங்கட்கிழமை) வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியானதற்கு, அமெரிக்கத் தரப்பு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
பொதுவாக இப்படியான செய்தி தவறு என்றால், வெள்ளை மாளிகை உடனடியாக மறுப்பு தெரிவிக்கும். அதுவும், தகவல் வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியானால், மறுப்பு உறுதி.
இம்முறை மறுப்பு ஏதுமில்லை என்பதால், கதை நிஜம் என்று எடுத்துக் கொள்ளலாம்!
source: viruviruppu
0 கருத்துரைகள்:
Post a Comment