Tuesday, November 27, 2012

பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை - டிசம்பர் 6 அன்று தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் : பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுக்குழு முடிவு


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு கூட்டம் 25.11.2012 அன்று தேனியில் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய துணைத்தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய பொதுக்குழுவிற்கான பிரதிநிதிகளை மாநில பொதுக்குழு தேர்ந்தெடுத்தது. இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில், மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது, மாநில செயலாளர்கள் ஷேக் முஹம்மது அன்சாரி மற்றும் ஆரிஃப் பைசல், மாநில பொருளாளர் அஸ்கர் இப்ராஹிம், மாநில செயற்குழுஉறுப்பினர்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள்ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1. முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமும், இந்தியாவின் தொன்மையான வμலாற்று சின்னமும் ஆன பாபரி மஸ்ஜித் சங்பரிவார பாசிஸ்டுகளால் திட்டமிட்டு இடிக்கப்பட்டு 20 வருடங்கள் கழிந்தும் அதில் இன்றளவும் நீதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. வருகின்ற டிசம்பர் 6 தினத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஃபாசிச எதிர்ப்பு தினமாக அனுசரித்து பாபரி மஸ்ஜித் என்றும் நம் நினைவில்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்ய இருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் டிசம்பர் 6 அன்று "பாபரி மஸ்ஜிதிற்கான நீதி தேசத்தின் கடமை" என்ற தலைப்பில் 19 இடங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த தீர்மானித்துள்ளது. மேலும், போஸ்டர் பிரச்சாரம் மற்றும் 1 இலட்சம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றளவும் தாமதிக்கப்பட்டு வரும் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு விரைந்து நீதி கிடைத்திட மத்திய அரசு தனது பொறுப்புணர்வை உணர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்ககொண்டுள்ளது.

2. ஃபலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் காஸா நகர் மீது கொடூர தாக்குதலை நிகழ்த்தி காஸா நகரையே நிர்மூலமாக்கியுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் , நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பயங்கரவாத இஸ்ரேலின் இந்த தாக்குதலை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. உலக நாடுகள் இஸ்ரேலை கண்டிப்பதோடு நடவடிக்கைக்கும் உட்படுத்த வேண்டும். இந்தியா இத்தாக்குதலை கண்டிப்பதோடு இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு கோருகின்றது. இந்த கொடூர தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்து போர் நிறுத்தம் ஏற்பட உதவிய எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி அவர்களை இப்பொதுக்குழு பாராட்டுகின்றது.

3. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை முற்றிலுமாக இப்பொதுக்குழு கண்டிக்கின்றது. இந்த அந்நிய முதலீட்டால் நமது நாட்டின் பலகோடி சில்லரை வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, மக்களுக்கு விரோதமான இக்கொள்கை முடிவை திரும்பப் பெறுமாறு மத்திய அμசை இப்பொதுக்குழு வற்புறுத்துகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza