Monday, November 19, 2012

பால்தாக்கரேயின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்!


பால்தாக்கரேயின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்!பால்தாக்கரேவின் குடும்ப மருத்துவராக டாக்டர் ஜலீல் பார்க்கர் என்ற ஒரு இஸ்லாமியரே இருந்து வந்துள்ளார்.
இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையின் தீவிரத் தலைவர் என்று முத்திரை குத்தப்பட்ட பால் தாக்கரே, தன்னுடைய குடும்ப மருத்துவராக டாக்டர் ஜலீல் பார்க்கர் என்ற இஸ்லாமியரையே வைத்திருந்திருக்கிறார். மேலும் தன் உடல்நிலை குறித்து அனைத்து ஆலோசனைகளும் ஜலீல் பார்க்கரிடமே கேட்டு வந்துள்ளார்.

தாக்கரேவுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும்போது, டாக்டர் ஜலீல் பார்க்கர் தாக்கரேவின் இல்லமான மாதோஸ்ரீக்கு அடிக்கடி வருகை தந்து இவருக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தாக்கரேவின் மிக நம்பிக்கைக்குரிய மருத்துவர் என அவரது உறவினர்கள் ஜலீல் பார்க்கர் குறித்து தெரிவித்துள்ளனர்.


இவர்களின் உள்ளார்ந்த பிணைப்பைப் பார்த்து சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கட்சித் தொண்டர்களுடன் பொதுப்படையாகவே புகழ்ந்து பேசியிருக்கிறார்.

பால் தாக்கரேவின் மறைவுச் செய்தியை கண்களில் நீர் துளிகளோடும் உடைந்த மனதோடும் பார்க்கர்தான் அறிவித்துள்ளார்.

source: www.inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza