Sunday, November 18, 2012

காஸ்ஸா:சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

இ.அபூபக்கர்
புதுடெல்லி:காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய  விமானத் தாக்குதலில் மூத்த ஹமாஸ் கமாண்டர் அஹ்மத் ஜஃபரியும், பெண்களும், குழந்தைகளும் உள்பட ஏராளமானோர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “மக்களை இத்தகைய காட்டுமிராண்டித் தனமாக கூட்டுப் படுகொலைச் செய்வது சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களை கடுமையாக மீறுவதாகும். ஃபலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து குரல் எழுப்பவேண்டும்.

ஹமாஸ் தலைவர்களை மட்டுமல்ல, சாதாரண மக்களையும் குறிவைத்தே இஸ்ரேல் விமானம் தாக்குதலை நடத்தி வருகிறது. ஃபலஸ்தீனர்களை இனப்படுகொலைச் செய்வதை தடுக்க இந்திய உடனடியாக தூதரக ரீதியாக தலையிட வேண்டும். இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க ஐக்கிய நாடுகள் சபை முயற்சி எடுக்கவேண்டும்.” இவ்வாறு அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza