முஸ்லிம் "பர்சனல் லா" போர்டின் தேசிய துணைப்பொதுச்செயலாளர் "அப்துர்ரஹீம் குரைஷி" நேற்று போபாலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய தேசத்தின் உளவுப்பிரிவுகளான "ரா" மற்றும் "ஐ.பி" ஆகிய துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பலர், காக்கி நிறத்திலான "போலீஸ் உடைகள்" அணிந்துக்கொண்டிருந்தாலும், அவர்கள் காவி பயங்கரவாத சிந்தனையுடன் செயல்படுவதாக தெரிவித்தார். எனவே தான், ஹிந்துத்துவ தீவிரவாதிகள் குண்டுகளை வைத்த பல வழக்குகளில், முஸ்லிம் இளைஞர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டு கொடுஞ்சித்திரவதை செய்யப்பட்டனர், என்றார்.
மங்கோலிய வம்சத்து போடோக்கள், தங்களை இந்தியர்கள் என்றுக்கூட சொல்லிக்கொள்வதில்லை என்றார், குரைஷி.
மேலும் "மத வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்தை" நிறைவேற்றாமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாக குறை கூறிய குரைஷி, அதுபோன்ற சட்டங்கள் நிறைவேற்றப்படுமானால், சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் பொறுப்பு காவல்துறைக்கு அதிகமாக இருக்கும் என்பதை தவிர, அரசுகளுக்கு கூடுதல் சுமை ஒன்றும் ஏற்படப்போவதில்லை, என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment