Thursday, November 1, 2012

பிரபல கடத்தல் தலைவர் பொறியில் சிக்கினார்! தகவல் கொடுத்தவருக்கு $660,000 பரிசு!!


கொலம்பியா நாட்டு பிரபல கடத்தல் குழுவின் தலைவரை பொறி வைத்துப் பிடித்துள்ளது, ஆஜென்டீனா நாட்டு போலீஸ். இவரை பற்றி தகவல் கொடுத்த ‘முகம் தெரியாத’ நபர், $660,000 பரிசுப் பணம் பெறுகிறார்.
கடத்தல் குழுவின் தலைவர், ஆஜென்டீனா நாட்டின் பொனஸ் ஏரிஸ் நகரின் ரெஸ்ட்டாரென்ட் ஒன்றில் உணவு உண்ண டேபிள் ரிசர்வ் பண்ணியுள்ளார் என்று கிடைத்த ரகசிய தகவலையடுத்து, ரெஸ்ட்டாரென்ட் பார்க்கிங் லாட்டில் காத்திருந்த போலீஸ் அதிரடிப் படையினர் அவரை சுற்றி வளைத்துப் பிடித்து, கைது செய்தனர்.

அப்போது அவருடன் ஒரேயொரு பாடிகார்ட் மட்டுமே இருந்தார்.

ஐந்து வெவ்வேறு நாடுகளின் போலி பாஸ்போர்ட்களில், வெவ்வேறு பெயர்களில் நடமாடிய கடத்தல் குழுவின் தலைவர் ஹென்ரி டி லோபெஸ், ஆஜன்டீனா நாட்டுக்கு, வெனிசூலா நாட்டு பாஸ்போர்ட் ஒன்றில் வந்திருந்தார்.
கொலம்பியாவில் தேடப்படும் குற்றவாளியான ஹென்ரி டி லோபெஸ், கொலம்பியாவில் ‘மி சன்க்ரே’ என்ற பட்டப் பெயரில் பிரபலமானவர். ‘மி சன்க்ரே’ என்ற ஸ்பானிஷ் பட்டப்பெயரின் அர்த்தம், ‘எனது ரத்தம்’
நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ள இவரது தலைக்கு $660,000 பரிசுப் பணம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஹென்ரி டி லோபெஸ் கைது செய்யப்பட்டதற்கு, அவர் ரெஸ்ட்டாரென்டுக்கு வருகிறார் என்ற தகவல் கிடைத்ததே காரணம் என ஒப்புக்கொண்டுள்ள கொலம்பியா காவல்துறை தலைவர் ஜோஸே ரொபர்டோ லியோ, “தகவல் கொடுத்த நபருக்கு பரிசுப் பணம் வழங்கப்படும். அவரது பாதுகாப்பு கருதி, அவரது பெயர், அடையாளங்கள் வெளியிடப்பட மாட்டாது” எனவும் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜென்டீனா பாதுகாப்பு செயலாளர் வெர்ஜியோ பெர்னி, “கைது செய்யப்பட்டுள்ள நபர், மிக பயங்கரமானவர். நூற்றுக் கணக்கான கொலைகளுக்கு காரணமாக உள்ளவர்” என்று தெரிவித்துள்ளார்.
கொலம்பியா போலீஸின் தேடுதல் தீவிரமடையவே, அங்கிருந்து தப்பிய ஹென்ரி டி லோபெஸ், பரகுவே, வெனிசூலா ஆகிய நாடுகளின் ஊடாக பயணம் செய்து, ஆர்ஜென்டீனாவை வந்தடைந்தார். வெனிசுவலாவில் பெறப்பட்ட போலி பாஸ்போர்ட் ஒன்றில், பிசினெஸ்மேன் போல வந்திறங்கிய அவரை, ஏர்போர்ட்டில் குடிவரவு அதிகாரிகள் யாரும் சந்தேகப்பட்டிருக்கவில்லை.
இவரது நடமாட்டம் குறித்து தகவல் கொலம்பியா போலீஸூக்கு தகவல் கிடைத்தவுடன், அவர்கள் ஆஜென்டீனாவை தொடர்பு கொண்டனர். ஹென்ரி டி லோபெஸின் முக்கியத்துவம் கருதி, ஆர்ஜென்டீனா ஜனாதிபதி கிருஸ்டீனா பெர்னான்டெஸ், தனிப்பட்ட முறையில், “சகல வசதிகளையும் பயன்படுத்தி அவரை கைது செய்யவும்” என உத்தரவு பிறப்பித்ததாக, பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஹென்ரி டி லோபெஸிடம் இருந்து, ஆஜென்டீனா, பரகுவே, எகுவடோர், பிரேசில், வெனிசூலா ஆகிய 5 நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza