குவைத் நகரம்:ஹஜ் பெருநாளை முன்னிட்டு குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளைச் செய்து வரும் குவைத் இந்தியா ஃபிராட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) சார்பாக விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெருநாள் தினத்தன்று மதியம் சரியாக 2 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்வில் கால்பந்தாட்டம், கபடி, கைப்பந்து போட்டி, பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகள் எனப் பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதியாக முதலிடம் பிடித்தவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கும் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. அப்பாஸியா, பர்வனியா, பாஹீல், சிட்டி ஆகிய நான்கு அணிகள் கபடி, கைப்பந்து, கயிறு இழுத்தல் போட்டிகளில் கலந்து கொண்டன.
சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற போட்டிகளின் இறுதியில் அப்பாஸியா அணி பட்டத்தைத் தட்டிச் சென்றது, இரண்டாம் இடத்தை சிட்டி அணி கைப்பற்றியது. போட்டியில் வென்றவர்களுக்கு இறுதியில் KIFF-ன் தலைவர் சகோ. அப்துல் சலாம் அவர்கள் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கி கவுரவித்தார்.
மொத்த நிகழ்ச்சியையும் சகோ. ஷிஹாப் அவர்கள் தொகுத்து வழங்கினார். KIFF-ன் தன்னார்வத் தொண்டர்கள் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment