Monday, October 29, 2012

அமெரிக்காவை எதிர்த்தால் அவமானபடுத்துவதா? தனது கருத்தில் மாற்றம் இல்லை: இம்ரான் கான்

Imran_Khan
கனடா:பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டு அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான், நியூயோர்க் செல்லும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது முதல் தெக்ரிக்-இ-இன்சாப் எனும் கட்சியை தொடங்கி நடத்தி வரும் இம்ரான் கான், சமீபகா லமாக பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா ஏவுகணைகள் நடத்தும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துவருகிறார். இந்நிலையில் தனது கட்சிக்கு நிதி சேர்க்கும் முகமாக நியூயார்க்கில் சொற்பொழிவு நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு செல்ல தயாரானர் இம்ரான் கான்.

கனடாவின் டொரொண்டோவிலிருந்து நியூயார்க்கிற்கு செல்லும் வகையில் விமான நிலையத்திற்கு வந்து விமானத்தில் ஏறிய அவரை, நியூயார்க் புலனாய்வு அதிகாரிகள் வழிமறித்து கீழிறக்கினர்.
பின்பு, பாகிஸ்தானில் தலிபான்கள் இலக்குகள் மீது அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்துவதை எதிர்ப்பதற்கு என்ன காரணம் என அவர்கள் கேள்வி கேட்டு விசாரித்துள்ளனர். இது குறித்து டுவிட்டரில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள இம்ரான் கான், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். தாமதமானாலும் நியூயார்க்கில் உள்ள எனது கட்சியினரை தொடர்ந்து சந்திக்கவுள்ளேன் என கூறியுள்ளார்.
இதே வேளை இம்ரான் கான் நியூயார்க்கில் நடத்தவிருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza