Tuesday, October 23, 2012

நில நடுக்கம் பற்றி முன் கூட்டியே தகவல் கொடுக்காத விஞ்ஞானிகளுக்கு சிறை!


 நில நடுக்கம் பற்றி முன்னெச்சரிக்கை செய்யாத விஞ்ஞானிகளுக்கு இத்தாலி நீதிமன்றம் சிறை தண்டனை விதித்திருப்பது  மற்ற உலகளாவிய விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது பற்றிய விவரம்:
இத்தாலி நாட்டின் லாஅகியுலா பகுதியில் கடந்த 2009 ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 309 பேர் கொல்லப்பட்டனர் .

 இதனை முன்கூட்டியே கணித்து  சொல்லாத குற்றத்திற்காக பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட் 6 பேருக்கும் தலா 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு உலக அளவில் அறிவியல் நிபுணர்களை அதிர்ச்சி செய்ய வைத்திருக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza