Tuesday, October 23, 2012

5 மாதத் தகவல் இருட்டடிப்பின் மர்மம் என்ன? - ஃபஸீஹின் மனைவி

fasih mahmood hand over to india
சமீபத்தில் சவூதி அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு தில்லியில் கைது செய்யபப்ட்ட பஸிஹ் முகமதுவின் இருப்பிடம் குறித்து எத்தகவலையும் தெரிவிக்காமல் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று பஸிஹ் முகமதுவின் மனைவி  22 வயது நிகாத் பர்வீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானம் மற்றும் தில்லி ஜும்மா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்றும் இந்தியன் முஜாஹிதின் சார்பாக பஸிஹ் முகமது இதை செய்ததாகவும் இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.


இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க சவூதியில் பொறியாளராக பணி புரிந்து வந்த பஸிஹ் ஐந்து மாதங்களுக்கு முன்பே மே 13 அன்று சவூதியில் கைது செய்யப்பட்டார். ஐந்து மாதங்களாக பஸிஹின் இருப்பிடம் குறித்து பர்வீன் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்தும் அவரின் இருப்பிடம் தெரியவில்லை.

பஸிஹின் இருப்பிடம் குறித்து எதுவும் தெரியாது என்று இந்திய அரசு மறுத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சவூதியிலிருந்து வெளியேற்றப்பட்டு தில்லி விமான நிலையம் வந்த பஸிஹை கைது செய்ததாக இந்திய அரசு கூறியது.

தன் கணவர் நீதிமன்றங்கள் செயல்படாத தினங்களில் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது (தசரா மற்றும் பக்ரீதை முன்னிட்டு அக்டோபர் 22 முதல் 27 வரை உச்ச நீதி மன்றம் விடுமுறை) பஸிஹை மிரட்டி ஒப்புதல் கையெழுத்து வாங்கவே என்று சந்தேகப்படுவதாக கூறிய பர்வீன் சவூதியில் வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிகை செய்தியின் படி தம் கணவர் மே மாதமே இந்தியாவிற்கு சவூதியால் அனுப்பப்பட்டதாக வந்த செய்தியை பத்திரிகையாளர்களிடம் காண்பித்தார்.
இந்திய புலனாய்வு நிறுவனங்கள் கைது செய்யப்பட்ட தன் கணவனை பற்றி எத்தகவலும் 5 மாதமாக தெரிவிக்காமல் தன்னை மன ரீதியாக கொடுமைப்படுத்துவதாக தெரிவித்த பர்வீன் இருதய நோயாளியான பஸிஹின் தந்தைக்கும் அவரின் தாய்க்கும் ஏதாவது ஏற்பட்டால் இவ்வரசு பொறுப்பேற்குமா என்று கேள்வி எழுப்பினார்.
தான் பஸிஹை பார்க்க இன்றிரவு தில்லி செல்வதாகவும் தனக்கு பஸிஹை பார்க்க அனுமதி தராவிட்டால் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்படுவேன் என்றும் கூறிய பர்வீன் உண்மையான விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடத்தபப்ட்டு உண்மை வெளிவர வேண்டும் என்பதே தமது ஆசை என்றும் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza