Tuesday, October 23, 2012

இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!


இந்திய அரசியல் சட்டம் 356 குடியரசுத் தலைவராட்சி (அல்லது மத்திய ஆட்சி) என்பது இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது , 

இடைநிறுத்தப்பட்டு நடுவண் அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை நடுவண் அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. 
இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க நடுவண் அரசிற்கு அதிகாரம் உள்ளது.மாநில சட்டப்பேரவையில் 
எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம். 


ஓர் மாநில ஆளுநர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் தாமே முடிவெடுத்தும், அல்லது ஆளும் கட்சியின் பரிந்துரைப்படியோ அல்லது நடுவண் அரசின் பரிந்துரைப்படுயோ சட்டப்பேரவையை கலைக்கலாம். அப்போது சட்டஅவை ஆறு மாதங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பெரும்பான்மை நிலைநிறுத்தப்பட இயலவில்லை எனில் தேர்தல்கள் நடத்தப்படும். 
மாநில ஆட்சி வழமையாக ஓர் முதலமைச்சரின் கீழ் இயங்காது குடியரசுத் தலைவரின் கீழ் இயங்குவதால் இதனை குடியரசுத்தலைவராட்சி என்று குறிப்பிடுகின்றனர்.ஆயினும் நிர்வாக அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கு மாற்றப்பட்டு ஆட்சி நடத்துகிறார். அவர் தமது உதவிக்கு ஆலோசகர்களை,ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், நியமித்துக் கொளவார்.பொதுவாக நடுவண் அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும். 

விதி 356 ஓர் மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் சரியாக இயங்கவியலா நிலை இருக்கும்போதுநடுவண் அரசு மாநில அரசை நீக்கி குடியரசுத் தலைவராட்சியை அமைத்திட அதிகாரம் வழங்குகிறது. 
இந்த விதி நடுவண் அரசு ஓர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது (காட்டாக கலவரங்கள்) அதனைக் கட்டுப்படுத்த இயலாத 
மாநில அரசினை கட்டுக்குள் கொண்டுவர வகை செய்கிறது.ஆயினும் பெரும்பாலான நேரங்களில் இது எதிர்கட்சி அரசுகளை நீக்கவே பயன்படுத்தப்படுவதாக அரசியல் விமரிசகர்கள் கருதுகிறார்கள். 
ஆகவே இது மாநில கூட்டாட்சிக்கு பொருத்தமற்ற விதி என்று வாதிடுகின்றனர். 

1950ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபிறகு 100க்கும் கூடுதலாக இவ்விதியை நடுவண் அரசு பயன்படுத்தி உள்ளது. 
இந்த விதி முதன்முதலாக சூலை 31,1959 அன்று கேரள மக்களால் தேர்ந்தெடுகப்பட்ட இந்திய பொதுவுடமைக் கட்சி அரசைக் கலைக்கப் பயன்படுத்தப்பட்டது. 1989 ஏப்ரல் 19 ஆம் நாள், பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் தி மு க மற்றும் அதிமுக அரசு களும் இந்த சட்டத்தை பயன் படுத்தி கலைக்க பட்டுள்ளது 


1988 இல் நாகாலாந்து அரசும் 1991 இல் மேகாலய அரசும், கலைக்கப்பட்டிருந்தன. 1991 இல் பாபர் மசூதி இடிக்கப் பட்ட சம்பவத்திற்குப் பின் நிகழ்ந்த கலவரங்களுக்கு காரணமான இந்துத்வ அமைப்புகளை தடை செய்யாததை காரணம் காட்டி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசத்தின் பாரதீய ஜனதாக் கட்சி அரசுகள் கலைக்கப்பட்டன. 
விதி 355 ஓர் மாநிலத்தை வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்தும் உள்நாட்டு கலவரங்களின்போதும் காப்பதை நடுவண் அரசிற்கு கட்டாயமாக்கியுள்ளது. 
அப்போது மாநில அரசிற்கு வழிகாட்டிட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
இந்தியாவில் மாநிலங்களின் குரல்வளையை நெரிக்கும் சக்தி என்று இச் சட்டத்தை அரசியல் விமர்சகர்கள் சுட்டி காட்டுகின்றனர் . 


அரசியல் சட்டம் 356-வது பிரிவின் கீழ் ஒரு மாநில ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு முடிவு எடுத்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் மத்திய அமைச்சரவை மறுபரிசீலனை செய்யுமாறு மட்டுமே! குடியரசுத் தலைவரால் கோர முடியும். 
மீண்டும் மத்திய அமைச்சரவை அதே கோப்பை திருப்பி அனுப்பினால் கையெழுத்திட வேண்டும்... 
நாடு சுதந்திரமடைந்தபிறகு அரசியல் சட்டம் 356-ஐ அதிகமாக பயன்படுத்தியது காங்கிரஸ் அரசுதான். 
1994 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட , 

அரசியலமைப்புச் சட்ட பெஞ்சு நீதிபதிகளின் தீர்ப்பில் பின்வரும் முக்கிய சட்ட விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன. 
குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, நீதிமன்றத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட செயல்; தீய உள்நோக்குடன் (malafide) ஆட்சி கலைக்கப் பட்டிருக்குமெனில் நீதிமன்றங்களுக்கு கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அமல்படுத்த அதிகாரம் உண்டு
பிரிவு 356 இல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப் பட்டிருக்கும் அதிகாரம் கட்டற்றதல்ல. நிபந்தனைகளுக்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டதே.
மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டலும், அப்பரிந்துரை எந்தச் சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அவற்றை நீதிமன்றங்கள் ஆராயலாம்.ஆட்சி கலைப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் துஷ்பிரயோகம் என்று நீதிமன்றங்கள் கருதினால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியிலமர்த்தும் உரிமை அவற்றிற்கு உண்டு.
இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு...

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza