காஸ்ஸா:காஸ்ஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் ஆக்கிரமிப்பை நிறுத்தவேண்டும் என்று அமெரிக்காவைச் சார்ந்த பிரபல சிந்தனையாளரும், சமூக ஆர்வலருமான நோம் சோம்ஸ்கி கூறியுள்ளார். காஸ்ஸாவில் உள்ள இஸ்லாமிக் யூனிவர்சிட்டி நடத்திய சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் சோம்ஸ்கி. முதல் தடவையாக அவர் காஸ்ஸாவிற்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
“காஸ்ஸாவிற்கான பயணம் மிகவும் துயரம் நிறைந்தது. இங்கு வந்த நாங்கள், பல காரியங்களையும் நேரில் கண்டோம். இங்கு முன்னரே வந்திருக்கவேண்டும்” என்று சோம்ஸ்கி கூறினார்.
மொழி இலக்கியம் தொடர்பான கருத்தரங்கில் நோம் சோம்ஸ்கி பேசுகையில், சம கால நிகழ்வுகளையும் குறிப்பிட்டார். உரைக்கு பிந்தைய கலந்துரையாடலிலும் ஈரான், இஸ்ரேல் விவகாரங்கள் இடம்பெற்றன. சுதந்திரம் மற்றும் சமாதானத்துடன் வாழ ஃபலஸ்தீன் மக்களுக்கு உரிமை உண்டு என்று சோம்ஸ்கி கூறினார்.
2010-ஆம் ஆண்டு சோம்ஸ்கி மேற்கு கரைக்கு வரவிருந்தார். ஆனால், இஸ்ரேல் அரசின் அனுமதி கிடைக்காததால் பயணத்தை ரத்துச் செய்தார். காஸ்ஸா இஸ்லாமிக் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அரபு வசந்தத்தின் எதிர்காலம் குறித்தும் உரை நிகழ்த்தினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment