Tuesday, October 23, 2012

கஷ்மீரில் வனப்பகுதி நிலம் வேறு நோக்கங்களுக்கு ஒதுக்கீடு! – சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்!


ஸ்ரீநகர்:கஷ்மீர் மாநிலத்தில் வனப்பகுதி நிலம் வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று comptroller and audit general of india(சி.ஏ.ஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இம்மாதம் வெளியிடப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தேசிய வனக் கொள்கையின்படி, மொத்த நிலத்தில் குறைந்தபட்சம் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் ஜம்மு கஷ்மீரில் அந்த அளவை விட மிகவும் குறைவாக 25 சதவீத வனப்பகுதி நிலம் மட்டுமே உள்ளது. இந்த 25 சதவீத நிலத்திலும் வெறும் 1,063 ஹெக்டேர் (ஒரு சதவீதம்) நிலம் மட்டுமே மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. 1991-92 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் 1,883.23 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டதை ஆவணங்கள் காட்டுகின்றன. இதற்குப் பதிலாக, வேறு எந்த நிலமும் வனப்பகுதி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை.

கஷ்மீர் மாநில வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட வனப்பகுதி நிலம் போல் இரு மடங்கு நிலத்தில் காடுகள் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza