Monday, October 22, 2012

மக்களை சந்திப்போம்! உண்மை சொல்வோம்! பாப்புலர் ஃப்ரண்ட் எழுச்சியுடன் நடத்திய கோவை மண்டல மாநாடு!


கோவை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நேற்றைய தினம் (21.10.2012) அன்று கோவையில் மாபெரும் மண்டல மாநாடு நடைபெற்றது.


சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் வலிமைக்காகவும் போராடக்கூடிய சமூக இயக்கங்கள் மீது அவதூறை பரப்பி அவப்பெயரை ஏற்படுத்தி அவர்களின் போராட்டங்களை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள சில ஃபாசிஸ சிந்தனை கொண்ட உளவுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு ஊடகங்களை மிகப்பெரும் ஆயுதங்களாக பயன்படுத்தி ஜனநாயக உரிமைக்காக போராடி வரும் இயக்கங்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு வருகிறது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மீது விதிவிலக்கு இல்லாமல் குற்றம் சுமத்தி வருகின்றனர்.



இதனை கண்டிக்கும் வகையிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாட்டினை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும் என்றடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில் மாபெரும் பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மாபெரும் நிகழ்ச்சியாக சென்னை, கோவை மற்றும் மதுரை ம்ண்டல மாநாட்டினை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.



"குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம்! நீதிக்கான முழக்கம்!" என்ற கோஷத்தை முன்வைத்து "மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்" என்ற அடிப்படையில் மாபெரும் மண்டல மாநாடு கோவையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில், தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐயின் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சிற்கு ஆண்கள் பெண்கள் என பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.



சென்னை மற்றும் மதுரை மண்டல மாநாடுகள் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

.








0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza