தமிழகத்தில் மக்களின் அவசர தேவைகளுக்கு பெரும் உதவியாக இருப்பது 108 ஆம்புலன்ஸ் மருத்துவம், காவல் மற்றும் தீ விபத்து முதலிய அவசர தேவைகளுக்கு 24 மணி நேரமும் கிடைக்க கூடிய இந்த இலவச சேவையை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து அவசர கால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்த சேவையை செய்து வருகிறது.
அவசர காலத்திற்கு உதவும் இந்த ஆம்புலன்சுக்கு ஓட்டுனர்கள் மற்றும் அவசர கால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ. நிறுவனம் நடத்துகிறது. பரமக்குடியில் வருகிற 25-ம் தேதி இந்த முகாம் நடைபெற உள்ளது. மாத ஊதியமாக 6800 ரூபாய் வழங்கப்படும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 8 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்கான ரூ.100 படியும் வழங்கப்பட உள்ளது.
பரமக்குடி பழைய பெண்கள் மருத்துவமனையில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் குறித்த மேலும் விவரங்களை 9629083108, 9629327108, 8754406108 என்ற எண்களை அழைத்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment