மதுரையிலிருந்து துபாய்,சார்ஜா,மஸ்கட் போன்ற நகரங்களுக்கு விமானம் இயக்கப்பட வேண்டும் எனபது வளைகுடாவில் பணியாற்றும் தென் தமிழக மக்களின் பல்லாண்டு கனவாகும்.தற்போது மதுரை விமான நிலையத்திலிருந்து கொழும்பு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கும் நிலையில் கனவு நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது,
அமீரகத்தில் 2 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வசிக்கின்றனர்.இவர்களில் தென் தமிழகத்தில் உள்ளவர்கள் நீண்ட தூரத்தில் உள்ள விமான நிலையங்களிலிருந்து தங்கள்து ஊர்களுக்கு செல்லும் சிரமங்களை விவரித்தனர்.மேலும் மதுரையிலிருந்து துபாய்,சார்ஜா போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டால் மிகவும் லாபகரமான வான் வழியாக ஏர் இந்தியாவுக்கு இது அமையும் மேலும் கேரளாவிற்கு அதிக விமானங்கள் இயக்குவது போல் தமிழகத்திற்கும் இயக்க வேண்டும்.இங்குள்ள தமிழ் சங்கங்கள் சார்பில் அனைத்துவிதமான ஒத்துழைப்பும் ஏர் இந்தியாவிற்கு வழங்கப்படும் என தெரிவித்தனர்.
ஏர் இந்தியா அதிகாரிகள் பேசுகையில்,விமான சேவை வழங்குவது தொடர்பாக நிர்வாகத்திடம் எடுத்துரைத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தனர்.
துபாயில் ஏர் இந்தியா நிறுவனத்தாருடன் அமீரக தமிழ் அமைப்புகள் நடத்திய கலந்தாலோசனை கூட்டம் இடிஏ அஸ்கான் நிறுவனத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் ஏர் இந்தியா உள்நாட்டு மேலாளர்
மோகன் பாபு, விறபனை மேலாளர் ஆஸ்லி ரெவ்லோ,ஷார்ஜா விமான நிலைய மேலாளர் கண்ணன்,ஏர் இந்தியா துபாய் சர்வதேச மேலாளர் ராதாகிருஸ்ணன் இடிஏ தலைமை நிலைய மேலாளர் மீரான்,ஈடிஏ மனிதவள மேம்பாட்டுதுறை நிர்வாக இயக்குநர் அக்பர்கான்,ஈடிஏ டிரேடி அன்ட் ஷிப்பிங் இயக்குநர் நூருல் ஹக்,ஈடிஏ சென்ட்ரல் அக்கவுன்ட்ஸ் மேலாளர் ஹமீதுகான்,ஈடிஏ தலைமை அலுவலக மேலாளர் மீரான்,,அமீரகத்தில் உள்ள தமிழக அமைப்புகள் சார்பில் ராஜாக்கான்,ஹமீது ரஹ்மான், ஜெகந்நாதன்,அகமது மீரான்,யஹ்யா முகைதீன்,முதுவை ஹிதாயத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக அமீரகத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று(வெள்ளி) துபாய்க்கு வருகை தந்திருந்த மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜீத் சிங்கை நேரில் சந்தித்து மதுரையிலிருந்து துபாய்,சார்ஜா உள்ளிட்ட வளைகுடா பகுதிக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கை மனுவை பெற்று கொண்ட மத்திய அமைச்சர் அஜீத்சிங் விரைவில் இக்கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.அவருடன் அமீரகத்துக்கான இந்திய தூதர் எல்.கே.லோகேஷ் உடனிருந்தார்
முன்னதாக மத்திய அமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் இடிஏ அஸ்கான் தலைமை அலுவலக மேலாளர் மீரான்,இடிஏ ஸ்டார் ப்ராபர்டீஸ் நிதித்துறை பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் சார்பில் பொருளாளர் நயீம், ஈமான் விழாக்குழு செயலாளர் ஹமீது யாசின்,துபாய் தமிழ்சங்கத்தின் பொது செயலாளர் ஜெகந்தாதன்,வானலை வளர்தமிழ் மன்றம் மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக இணை செயலாளர் கீழைராசா, காயிதே மில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான்,அமீரக தமிழர் மன்றத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு நல்ல உள்ளங்களின் முயற்சியால் மதுரையிலிருந்து நேரடியா துபாய்,சார்ஜா உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவில் ஏர் இந்தியா விமான சேவையை துவக்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்
0 கருத்துரைகள்:
Post a Comment