Sunday, October 28, 2012

அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு ராணுவ பயிற்சி!


டெல் அவிவ்: அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மிகப்பெரிய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் எல்லை  பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த பிரச்னையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதேபோல் ஈரான் அணு ஆயுதங்களை  தயாரிப்பதாக கூறி, அந்த நாட்டின் மீது போர் தொடுப்போம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் மிரட்டி வருகின்றன. இந்நிலையில், இதற்கு முன்பு எப்போதும்  இல்லாத வகையில் மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்கா, இஸ்ரேல் ஈடுபட்டுள்ளன. ராக்கெட்களை ஏவி இருநாட்டு வீரர்களும் பயிற்சியில்  ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஆயிரம் அமெரிக்க வீரர்களும் இதே எண்ணிக்கையில் இஸ்ரேல் வீரர்களும் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சியில் மேலும் 2,500 அமெரிக்க வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ''இஸ்ரேலுக்கு பல்வேறு வகையில் அச்சுறுத்தல் உள்ளது.  இதை முறியடிக்கும் திறமையை வளர்த்து கொள்ள பயிற்சி நடக்கிறது. 3 வாரங்களுக்கு இந்த பயிற்சி தொடர்ந்து நடக்கும்'' என்று இரு நாட்டு ராணுவ  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வீரர்கள் கூறுகையில், ''எதிரிகள் ரசாயன வெடிகுண்டு தாக்குதல் நடத்தினாலும் அதை முறியடிக்கும் பயிற்சியும்  மேற்கொண்டோம்'' என்றனர். இந்த கூட்டு பயிற்சியை பார்க்க மீடியாக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள  நிலையில், இரு நாடுகளும் ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza