புதுடெல்லி:ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் கலவரத்தை கட்டுப்படுத்த ஐ.நா அமைதிப்படை பாதுகாப்பு பணியை மேற்கொண்டது. இப்படையில் இந்திய ராணுவ வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். காங்கோவில் ஒரு ஹோட்டலில் வைத்து விபச்சார குற்றத்தில் ஈடுபட்டவர்களுடன் இந்திய மேஜர் ஒருவரும் கைதுச் செய்யப்பட்டார். இதுத்தொடர்பான விசாரணை நடந்துவரும் சூழலில் அவருக்கு எதிராக இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டது.
தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் பிரிட்டோரியா போலீஸில் அளித்த புகாரின் பேரில் அமைதிப்படையில் இடம் பெற்றிருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இக்குற்றங்களுக்கு முதல்கட்ட ஆதாரம் உள்ளதாக ஐ.நா, இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment