Monday, October 22, 2012

ஏழை மாணவர்களுக்கு 25% இலவச ஒதுக்கீடு தனியார் பள்ளிகளில் அமல்படுத்தாது ஏன்? குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கேள்வி ?


            தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின்‘ பொது விசாரனை ‘சென்னையில் நேற்று முன்தினம் ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா தலைமையில் நடைபெற்றது.
அப்போது அதில் கலந்து கொண்ட ஆணையத்தின் உறுப்பினர் வி. வசந்தி தேவி பேசிய போது இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டை அமல்செய்ய தேவையில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தில் இருந்து எந்த மாதிரியான உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளன. என கேள்வி எழுப்பினார் .

இந்த கேள்விகளுக்கு பதிலளித்த அதன் இயக்குனர் செந்தமிழ் செல்வி :
மாணவர் சேர்க்கை உறுதி படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இலவசமாக கட்டனமின்றி மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்று சொல்லமுடியாது என தெரிவித்தார். மேலும் 1 கிலோ மீட்டர் சுற்றழவில் அரசு பள்ளிகள் இருக்கும்போது தனியார் பள்ளிகளில் குழநதைகளை சேர்த்தால் அவர்களின் கட்டணத்தை அரசு தர இயலாது என்று நாங்கள் தெரிவித்திருந்தோம் ஆனால் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபோது அரசு வழங்கும் என தெரிவித்த விளக்க கடிதம் இப்போது தான் எங்களுக்கு கிடைத்துள்ளது. என்றும் அவர் தெரிவித்தார்

இதற்கு பதிலளித்துப் பேசிய ஆணையத் தலைவர் சர்ந்தா சின்ஹா :- இந்த சட்டம் குறித்து தெளிவாக புறிந்து கொள்ளுவார்கள். தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளில் 25% பேர் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு இலவச கல்வி வழஙகப்பட வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை திருப்பி வழங்குவதில் எந்த வித நிபந்தனையும் விதிக்கக்கூடாது. என்றார் . தொடர்ந்து பேசிய வி. வசந்தி தேவி:- இந்தச் சட்டமே குழந்தைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யும் சட்டம் தான் . தனியார் பள்ளிகளை பாதுகாப்பதர்க்கல்ல தமிழகத்தில் இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமைச்சட்டமே அமல்படுத்தப்படவில்லை என்பது தெரிகிறது என்றார்.
மேலும் பேசிய சாந்தா சின்ஹா தனியார் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரை சேர்ந்த 25% மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவது தொடர்பாக விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள் மாநில அரசுக்கு அனுப்புகிறோம் அதை நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza