Monday, October 22, 2012

2013 ம.பி. சட்டசபை தேர்தலில் SDPI போட்டி


sadi siddiqe
போபால்:எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக  மாநில செயற்குழு எடுத்த  முடிவைத் தெரிவித்தார். கட்சியின் தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் கான் செயற்குழுவுக்கு தலைமை வகித்தார்.

மாநிலத் தேர்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தலைவராக தன்னை நியமித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி தெரிவித்தார். இந்தூரைச் சேர்ந்த முஹம்மத் சலீம் அன்சாரீ, அப்துர் ரவூஃப், குவாலியர் அப்துல் கனி, ஜபல்பூர் இர்ஃபானல் ஹக், தேவஸ் ஹஃபிஸ் ஷப்பீர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் அவர் கூறுகையில் அக்டோபர் 20 முதல் நவம்பர் 20 வரை உறுப்பினர்களைச் சேர்க்கும் பிரச்சாரம் தொடங்கப் போவதாக தெரிவித்தார்.  மேலும் வருகின்ற புத்தாண்டு ஆரம்பத்தில் மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தேசிய அளவில் எஸ் டி பி ஐ தொடங்கும் என்றும் அறிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஸித்தீக்கி எஸ் டி பி ஐ கட்சி இந்தியாவின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினர்களுக்காக, குறிப்பாக சிறுபான்மையோர், தலித், இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காகவும், அவர்களின் வளர்ச்சியை மீட்டு எடுபதற்காகவும் தன் காலடி பதித்து போராடி வருவதாக தெரிவித்தார். மேலும் எஸ் டி பி ஐ கட்சியின் கொள்கை குரலாக “பசியில் இருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை” அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் 13  மாவட்டங்களில் எஸ் டி பி ஐ யின் செயல்பாடுகள் வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்தார். மேலும் எஸ் டி பி ஐ 11 மாவட்டங்களில்  நிறுவப்பட்டு பதினாறு மாவட்டங்களில் செயல்பட்டும் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza