Saturday, September 29, 2012

செல்ஃபோன் வெடித்து சிறுவன் படுகாயம்!


மனிதன் கண்டுபிடித்த அறிவியல் சாதனங்களால் எந்த அளவு நன்மைகள் ஏற்படுகின்றதோ அதே அளவு தீமைகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அந்த அறிவியலின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பான கைப் பேசிகள் இன்று இந்த உலகையே சுருக்கி விட்டது என்று கூறலாம்.

இந்தியாவில் கழிவறையை உபயோகிப்பவர்களை விட கைப் பேசிகள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது ஒரு ஆய்வு. அந்த அளவு இவை மனிதர்களின் அத்தியாவசிய பொருளாகிவிட்டது.ஆனால், இந்த கைப்பேசிகள் என்றாவது சில நேரங்களில் வெடித்து அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.இந்த செய்திகளை அவ்வப்போது பத்திரிக்கைகளிலும் காண முடிகிறது.



ந்த வரிசையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில்  கைபேசி வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது அக் கைபேசி வெடித்ததால் பத்துவயது சிறுவன் ஒருவனுக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் :

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ள  ஷாஜாப்பூர் என்னும் ஊரில் பத்துவயதேயான சிறுவன் சேத்தன்சிங் வாயில் கைபேசி ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, அந்த கைபேசி திடீரென வெடித்ததால் சிறுவனின்  முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அந்தச் சிறுவனின் மேல்வரிசை பற்களும், உதடுகளும், கீழ்த் தாடைப் பகுதிகளும் பெரிதும் காயம் அடைந்துள்ளன.

அச்சிறுவனை அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக அவனுக்கு சிகிச்சை அளித்தனர். மருத்துவர்கள், சிறுவனின் நிலைமை இப்போது சீராகி உள்ளதாகக் கூறினர்.

அந்த கைபேசி எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பது தெரியவரவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza