Saturday, September 29, 2012

ராமநாதபுரத்தில் ரெயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து மரணம்!

சென்னையை சேர்ந்தவர் அமானுல்லா. இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரகமத் நிஷா (வயது 40). கணவன்-மனைவியும் உறவினர்களுடன் ராமநாதபுரம் ஏர்வாடி தர்கா கொடி ஏற்று விழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்து இருந்தனர். பின்னர் அமானுல்லா, ரகமத் நிஷா சென்னை செல்ல ராமநாதபுரம் ரெயில் நிலையம் வந்தனர். அப்போது அங்கு ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.


ரெயில் நின்றதும் பயணிகள் அனைவரும் முண்டியடித்து ஏற முயன்றனர். கூட்ட நெரிசலில் ரெயிலில் ஏற முயன்ற ரகமத் நிஷா தவறி கீழே விழுந்தார். அப்போது ரெயில் புறப்பட்டதால் அவர் மீது ரெயில் சக்கரம் ஏறியது. இதில் ரகமத் நிஷா அதே இடத்தில் உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார். தனது கண் எதிரே மனைவி ரெயிலில் விழுந்து இறந்ததால் அமானுல்லா கதறி அழுது புரண்டார். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்து குறித்து ராமேசுவரம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza