அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் மிரட்டலையும் மீறி ஈரான் அணுகுண்டு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஈரான் அணு குண்டு தயாரித்தால் அதை தங்கள் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தும் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால், ஈரான் இதை மறுத்து வருகிறது. அணு சக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக ஈரான் கூறுகிறது.
நியூயார்க்கில் நடந்த ஐ.நா சபை கூட்டத்திலும் இஸ்ரேல் இதே புகாரை கூறியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ஐ.நா சபை கூட்டத்தில் பேசியதாவது:-
ஈரான் அணு செரிவூட்டல் செய்வதில் மிக முன்னேறி விட்டது. கிட்டத்தட்ட முழு அளவை எட்டிவிட்டது. எனவே இன்னும் ஓரிரு மாதத்தில் ஈரான் அணுகுண்டை தயாரித்துவிடும். அதை எங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே நாங்கள் ஆபத்தின் சூழலில் இருக்கிறோம். மேலும் உலக அமைதிக்கு ஆபத்தை தருவதாக இருக்கும். எனவே உரிய நடவடிக்கையை ஐ.நா. சபை மேற்கொண்டு அணுகுண்டு தயாரிப்பை தடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment