Sunday, September 30, 2012

கேம்பஸ் ஃப்ரண்டின் பாராளுமன்ற அணிவகுப்பு நாளை!

Campus-Democracy
புதுடெல்லி:மாணவர்களின் இயக்க சுதந்திரத்திற்கு பாராளுமன்றம் சட்டமியற்றக் கோரி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாளை பாராளுமன்றத்தை நோக்கி அணிவகுப்பை நடத்த உள்ளது.
நிர்வாகங்களின் விருப்பத்தின் அடிப்படையில் கல்வி கூடங்களில் மாணவர்களின் இயக்க ரீதியான செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் தடைவிதிக்கின்றது. சில கல்வி கூடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.

 அரசியல் கட்சிகளுக்கு இடையே நடக்கும் வன்முறைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி அரசியலுக்கு தடைவிதிப்பது போன்றதுதான் மாணவர்கள் அரசியலை தடுப்பதும் ஆகும். இது ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானதாகும். இச்சூழலில் மாணவர்களின் இயக்க சுதந்திரம் கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாராளுமன்றம் நோக்கி அணிவகுப்பை நடத்துகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza