புதுடெல்லி:நீதிபதி அல்டமாஸ் கபீர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
1948-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பிறந்த அல்டமாஸ் கபீர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று எம்.ஏ மற்றும் எல்.எல்.பி பட்டங்களை பெற்றார்.
1973-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றத் துவங்கினார். 1990-ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியானார். 2005-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆக்டிங் நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற கபீர், அதே ஆண்டு மார்ச் மாதமே ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றார். நீதித்துறையில் சிறப்பாக பணியாற்றிய கபீருக்கு 2005-ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்ற நீதிபதி பதவி உயர்வு கிடைத்தது.
மறைந்த பிரபல எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் அரசியல்வாதியான ஹிமாயூன் கபீரின் மருமகன் தான் அல்டமாஸ் கபீர்.
0 கருத்துரைகள்:
Post a Comment