சுறுசுறுப்பாய் செயல்பட வேண்டுமா? நின்றாய் சாப்பிடுங்க நறைய தண்ணீர் குடிங்க! நீங்கள் விரைவில் சோர்வு அடைகிறீர்களா? உங்களால் எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாமல் சலிப்பு தோன்றுகிறதா? இதற்கு காரணம் உணவு முறை மற்றும் சில பழக்க வழக்கங்கள் தான். இதோ உங்களுக்காகவே சில டிப்ஸ்:
* தினசரி உணவில் தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்துள்ள தானியங்கள் உடலுக்கு சக்தி அளித்து, மன அழுத்தத்தை போக்குகிறது.
* வேளை தவறாமல் உணவு அருந்துங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு அவசியம். இடையிடையே ஆரோக்கியமான நொறுக்குத் தீனியையும் சாப்பிடலாம்.
* காலையில் எழுந்தவுடன் ஆடை இல்லாத பால் ஒரு டம்ளர் அருந்துங்கள். டீ (Tea), காபி (Coffee) போன்ற பானங்களை அருந்துவதை தவிர்த்திடுங்கள். அவை உறக்கத்திற்கு கேடு விளைவிக்கும்.
* இறைச்சி, பாலாடைக் கட்டி, இனிப்பு வகைகள் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு தான் ஏற்படும். நார்த்தங்காய், எலுமிச்சை (Lemon), காய்கறிகள், அவரை, பீன்ஸ் (Beans) போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.
* பெரும்பாலான பெண்களுக்கு இரத்த சோகை காரணமாக, சோர்வு உண்டாகலாம். இதற்கு இரும்புச் சத்து அதிகம் உள்ள பச்சைக் காய்கறிகள், வாழைப்பழம் மற்றும் இரும்புச் சத்தை தக்க வைத்துக் கொள்ளும் வைட்டமின் "சி"(Vitamin-C) உள்ள உணவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றி, உடலுக்கு சக்தி அளிக்கிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment