Sunday, September 23, 2012

முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு ரூ.55 லட்சம் பரிசு: பாகிஸ்தான் மந்திரி அறிவிப்பு!

முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்கர் ஒருவர் “இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட்டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன. 

பாகிஸ்தானில் போராட்டம் வலுவடைந்து உள்ளது. அதில், இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் சினமா படம் தயாரித்த அமெரிக்கர் தலைக்கு பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி குலாம்அகமது பிலோர் ரூ.55 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார். பெஷாவரில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 


முகமது நபிகளை இழிவு படுத்தி சினிமா படம் தயாரித்து வெளியிட்ட அமெரிக்கருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக அவரை கொல்பவருக்கு ரூ.55 லட்சம் (1 லட்சம் அமெரிக்க டாலர்) பரிசு தொகை வழங்கப்படும். மதத்தை அவமதிப்பவருக்கு இதுதான் சரியான தண்டனையாகும். பொது மக்கள் தவிர பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தலிபான் மற்றும் அல்- கொய்தா தீவிரவாதிகள் அவரை கொலை செய்தால் கூட அவர்களுக்கும் இந்த பரிசு தொகை பொருந்தும் என்று தெரிவித்தார். 

மேலும் அவர் கூறும் போது, ஒருவரை கொலை செய்யும்படி பொது மக்களை தூண்டி விடுவது கிரிமினல் குற்றம் என எனக்கு தெரியும். அதுகுறித்து பாகிஸ்தான் மற்றும் சர்வதேச கோர்ட்டில் என்மீது வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனெனில் இதுபோன்ற விஷயங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றார்.

இதற்கிடையே மந்திரி பிலோரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கர் தலைக்கு பரிசு தொகை அறிவித்துள்ள மந்திரி குலாம்அகமது பிலோர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி கட்சியான அவாமி தேசிய கட்சியை சேர்ந்தவர். இக்கட்சி கைபர்- பக்துன்கவா மாகாணத்தில் செல்வாக்குடன் திகழ்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza