ஐ.நா:கருத்து சுதந்திரத்தின் பெயரால் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை ஆதரிக்கும் வகையில் ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவிற்கு முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கருத்து சுதந்திரத்தின் பெயரால் ஒபாமா, மோசமான திரைப்படத்தை நியாயப்படுத்த முயன்றபொழுது முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தனர். மேலும் மத அவமதிப்புகளை தடைச் செய்ய சர்வதேச அளவில் சட்டமியற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களையும், சகிப்புத்தன்மையற்ற செயல்களையும் வன்மையாக கண்டிப்பதாக ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் பெயரால் உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கர்கள் தாக்கப்படுவதை உலக தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என்று ஒபாமா கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கருத்து சுதந்திரத்தின் பெயரால் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை ஒருபோதும் நியாயப்படுத்த இயலாது என்றும், இஸ்லாமோஃபோபியாவில் இருந்து மேற்கத்தியர்கள் விடுபடவேண்டும் என்று இந்தோனேஷியா அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயோனா தனது உரையில் கூறினார். ஜோர்டா மன்னர் 2-வது அப்துல்லாஹ், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயி, எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் சர்ச்சைகுரிய திரைப்படத்தை கண்டித்தனர். மேலும் அதுத்தொடர்பாக நிகழ்ந்த வன்முறைகளுக்கும் கண்டனம் தெரிவித்தனர்
0 கருத்துரைகள்:
Post a Comment