Thursday, September 27, 2012

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறினால் 10 கோடி மக்கள் மரணம் அடைவார்கள் 20 நாடுகள் கூட்டு அறிக்கை!

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறினால், 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் மரணம் அடைவார்கள் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

20 வளரும் நாடுகள் இணைந்த ஒரு கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் காரணமாக, உலக சராசரி வெப்பநிலை உயர்கிறது. இதனால், பனிமலைகள் உருகுதல், மிதமிஞ்சிய சீதோஷ்ணநிலை, வறட்சி, கடல் நீர்மட்டம் உயருதல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்.


 இதனால் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வீதம் 2030-ம் ஆண்டுக்குள் 10 கோடிக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதிலும், வளரும் நாடுகளில்தான் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படும் என்றும், உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதம் குறையும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza