தமது தூதரகத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்த பாதுகாப்பு படைக்கு அனுமதி மறுத்துள்ளது சூடான். இதனால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சூடான் தலைநகர் கார்ட்டூம் சென்று இறங்கிய அமெரிக்க பாதுகாப்பு டீம், நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளிலும் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க தூதரகங்களில், அதிக சேதமடைந்த இடங்களில், கார்ட்டூம் அமெரிக்க தூதரகமும் ஒன்று. அதையடுத்தே, தூதரகத்தை பாதுகாக்க அமெரிக்க Marine rapid response team அங்கு அனுப்பப்பட்டது.
இவர்கள் இன்று முதல் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பை பொறுப்பேற்பார்கள் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
சூடான் வெளியுறவு அமைச்சர் அலி அஹ்மத் கார்தி, “எமது நாட்டில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை பாதுகாத்துக் கொடுக்கும் திறமை எமது ராணுவத்துக்கு உள்ளது. இதற்காக வெளியே இருந்து யாரும் வரவேண்டிய அவசியம் கிடையாது” என்று கூறியுள்ளார்.
இந்த திடீர் திருப்பத்தை அடுத்து Marine rapid response team இன்று மாலை அமெரிக்காவுக்கு விமானம் ஏறுவார்கள் என சூடான் மீடியா செய்திகள் தெரிவிக்கின்றன!
1 கருத்துரைகள்:
intha avamaanam thevayaa
Post a Comment