வாஷிங்டன்:இறைத்தூதரை இழிவுப்படுத்தும் திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில் துனீசியா, சூடான் நாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினரை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அவசர சேவைக்கான அதிகாரிகளை தவிர இதர அதிகாரிகள் இரு நாடுகளில் இருந்து விரைவாக வெளியேவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் கூறினார்.
இரு நாடுகளுக்கும் செல்லும் அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேவேளையில் எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் தூதரக பணிகளை நிறுத்திவைக்க கனடா, ஜெர்மனி நாடுகள் தீர்மானித்துள்ளன. தூதரகத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்ய ராணுவத்தை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், சூடான் இக்கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அதனிடையே மேற்காசியா நாடுகளில் நேற்றும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன. பஹ்ரன், யூ ட்யூபில் திரைப்படத்தின் காட்சிகளை தடைச்செய்ய முடிவுச் செய்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment