Tuesday, September 18, 2012

ஈரான் தயாரித்துள்ள நவீன தொழில்நுட்ப ட்ரோன்!


         டெஹ்ரான்:  

24 மணிநேரமும் நிற்காமல் பறக்கும் திறன் கொண்ட நவீன தொழில்நுட்ப ட்ரோன்(ஆளில்லா விமானம்) தயாரிப்பு வெற்றிக்கரமாக பூர்த்தியானதாக ஈரான் அறிவித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன், ராணுவத்தினரை சுமந்து செல்லவும், நீண்ட தூர தாக்குதல்களை நடத்தவும் திறன் படைத்தது என்று ஈரான் ராணுவ கமாண்டர் மேஜர் ஜெனரல் முஹம்மது அலி ஜஃப்ரி கூறியுள்ளார். 
 முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன் விமானத்திற்கு ஷாஹித்-129 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது உள்நாட்டிலேயே ஈரான் தயாரித்துள்ள 2-வது ட்ரோன் விமானம் ஆகும்.இதற்கு முன்னர் 2010-ஆண்டு  ஆகஸ்டு  மாதம் முதன் முதலாக ஈரான் தயாரித்த கராரா என்ற ட்ரோன் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza