Tuesday, September 18, 2012

அமெரிக்க அரசை கண்டித்து இராமநாதபுரத்தின் பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டம்!

 இறைவனின் இறுதி தூதர் நபி(ஸல்) அவர்களைஅவதூறாக சித்தரித்து சினிமா தயாரித்தது தொடர்பாக அமெரிக்க அரசை கண்டித்து கீழக் கரை, ஏர்வாடி, பெரியபட்டினம், எஸ்.பி.பட்டினம் பகுதிகளில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

முகமது நபியை அவதூறாக சித்தரித்து அமெரிக்காவில் தயாரான சினிமாவின் 14 நிமிட முன்னோட்ட காட்சி ஜூலை மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமெரிக்க அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி, பெரியபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முகமது நபியை அவதூறாக சித்தரித்து சினிமா எடுத்த தயாரிப்பாளர், இதற்கு ஆதரவளித்த அமெரிக்காவை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்க அதிபர் ஒபாமா, சினிமா தயாரிப்பாளர் சாம்பைசல் ஆகியோரது உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.  

கீழக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில பொதுச் செயலாளர்  அப்துல் ஹமீது ராமநாதபுரம் சட்டசபை தொகுதி துணைத்தலைவர் அப்பாஸ்,அபு, ஏர்வாடியில் முகமது யூனுஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாவட்ட  பொதுச் செயலாளர்  இஸ்ஹாக்,ராமநாதபுரம் தொகுதி  செயலாளர் ஜமீல், பெரியபட்டினத்தில் எஸ்டிபிஐ ராமநாதபுரம் தொகுதி தலைவர் பைரோஸ்கான், மாவட்டச் செயலர் செய்யது இபுராகிம், ஜமாத் தலைவர்கள் ஜீனத், சாகுல்ஹமீது, ஆலிம்கள் இஸ்மாயில், ஜாபர் பேசினர்.

எஸ்பி பட்டினத்தில் ஜமாத் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாத் செயலாளர் கரமத் அலி தலைமை வகித்தார். மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் செரீப் பேசினார். மத்திய மாநில அரசுகள் உடனடியாக இச்செயலை கண்டிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டது. ஜமாத் நிர்வாகிகள் உட்பட ஏராளமான முஸ்லீம்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே அமெரிக்க அரசை கண்டித்து அனைத்து முஸ்லிம் ஜமாஅத், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எமனேஸ்வரம் முஸ்லிம் ஜமாத்  சபைத் தலைவர் ஆலம் தலைமை வகித்தார். மாவட்ட உலமாக்கள் சபை தலைவர் வலியுல்லாக்நுரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் தலைவர் சீனி அலியார், பரமக்குடி தவ்ஹித் ஜமாத் தலைவர் சதாத்அலி, தமுமுக நகர் தலைவர் அகமது கபீர், SDPI நிர்வாகி அப்துல்லாஹ்சேட் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza