இறைத்தூதர் முகமது நபி(ஸல்) அவர்களை தவறதாக சித்தரித்து திரைப்படம் எடுத்தவரையும், அமெரிக்க அரசையும் கண்டித்து பாம்பனில் இஸ்லாமியர்கள் கண்டன பேரணி நடத்தினர்.
முகமது நபியை தவறாக சித்தரித்து அமெரிக்காவில் திரைப்படம் தயாரிக்கப்படடு திரையிடப்பட்டுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படம் எடுத்த அமெரிக்கரையும், அமெரிக்காவையும் கண்டித்து பாம்பனில் நேற்று இஸ்லாமியர்கள் கண்டன பேரணி நடத்தினர். திரைப்படத்தை உடனே நிறுத்த வலியுறுத்தி பாம்பனில் கடையடைப்பும் நடந்தது.
நேற்து மாலை நடந்த கண்டன பேரணிக்கு ஜமாத் தலைவர் ஹமீது சுல்தான் தலைமை வகித்தார். பாம்பன் பள்ளியிலிருந்து இருந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பேரணியாக புறப்பட்டு ரயில்வே மைதானத்திற்கு வந்தனர்.அங்கு கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் பள்ளி தலைவர் ஹப்பில்லா, முகம்மதியாபுரம் ஜமாத் தலைவர் நிஜாம்தீன், இமாம் ஜூம்மா பள்ளி தலைவர் ஜனாப் சாலிம்கனி பாக்கவி, இமாம்பாரூக் பள்ளி ஜனாப் பாரூக், சிவகங்கை மறைமாவட்ட அருட்தந்தை அமல்ராஜ், பாளையங்கோட்டை ஜனாப்பாளைரபீக் ஆகியோர் கலந்து கொண் டனர். ஏற்பாடுகளை நூருல் இஸ்லாம் இளைஞர்கள் செய்திருந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment