லக்னோ:அயோத்தி பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளைச் கொலைச் செய்ய இந்திய முஜாஹிதீன்(?) மற்றும் சிமி(?) திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய பிரதேச தீவிரவாத எதிர்ப்புபடை தெரிவித்துள்ளது.
இத்தகவலை 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையிலிருந்து தெரிந்துகொண்டதாக மத்திய பிரதேச தீவிரவாத எதிர்ப்புபடை கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரி லக்னோவில் உள்ள அலஹாபாத் உயர் நீதிமன்ற கிளையில் ரஞ்சனா அக்னி ஹோத்ரி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
திங்கள்கிழமையன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.பி.சிங்க் மற்றும் டி.கெ. உபத்யை ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரபிரததேச அரசிடம் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் எஸ்.யு. கான், சுதிர் அகர்வால் மற்றும் டி.வி.ஷர்மா (தற்போது ஓய்வுபெற்றுள்ளார்) ஆகிய மூன்று பேருக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிசீட்டு இல்லாமலும், முற்றிலும் சோதனை செய்யாமலும் எந்த ஒரு வாகனத்தையும் அனுமதிக்கக் கூடாது. மேலும் நீதிமன்ற பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் நீதிமன்ற சபையில் (பார் கவுன்சில்) உறுப்பினராக இருந்தாலும் அவர்களையும் சோதனை செய்யவேண்டும். அவர்களை சாவடியில் எந்த சோதனை செய்யாமலும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்து பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல்திட்டங்கள் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவை தாக்கல் செய்த ரஞ்சனாவுக்கும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனுமீதான மறு விசாரணையை வருகிற ஏப்ரல் 19 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment