இஸ்லாமாபாத்:முத்தஹிதா குவாமி மூவ்மெண்டின்(எம்.க்யூ.எம்) தலைவர் மன்சூர் முக்தார் கொலைச் செய்யப்பட்டதை தொடர்ந்து உருவான அரசியல் வன்முறையில் பாகிஸ்தான் நகரமான கராச்சியில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
வாகனங்கள், கட்டிடங்களுக்கு தீவைத்த எம்.க்யூ.எம் தொண்டர்கள் காராச்சி முழுவதும் போராட்டம் நடத்தினர். மன்சூர் முக்தாரின் வீட்டில் அத்துமீறி நுழைந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் மன்சூர் முக்தார் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனை தடுக்க முயன்ற முக்தாரின் சகோதாரரையும் மர்ம நபர் சுட்டுள்ளார். இரண்டுபேரும் மரணமடைந்த செய்தி வெளியானதை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் நகரத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.
எம்.க்யூ.எம் தலைவரின் கொலை சம்பவம் பாக். பாராளுமன்றத்திலும் அமளியை ஏற்படுத்தியது. எம்.க்யூ.எம் எம்.பிக்கள் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment