Wednesday, March 28, 2012

மரணத்தண்டனை கடுமையாக அதிகரிப்பு: ஆம்னஸ்டி!


The death penalty is still in force in 57 countries worldwide

லண்டன்:பல்வேறு நாடுகளில் மரணத்தண்டனை கடந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ளது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் அறிக்கை கூறுகிறது.
20 நாடுகளில் கடந்த ஆண்டு 676 பேருக்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010-ஆம் ஆண்டில் 23 நாடுகளில் 527 பேருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. மிக அதிகமான மரணத்தண்டனை நிறைவேற்றிய நாடுகளில் சீனா முதலிடத்தை பிடிக்கிறது. 3-வது இடத்தில் சவூதி அரேபியாவும் ஆகும். அமெரிக்காவிற்கு 5-வது இடமாகும். பட்டியலில் இடம்பிடித்த அமெரிக்க கண்டத்தில் ஒரே நாடு அமெரிக்கா ஆகும். மரணத்தண்டனை விதிக்கும் நீதிமன்ற உத்தரவுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 2024 ஆகும்.முந்தைய ஆண்டு 1923 ஆகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza