வாஷிங்டன்:இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக நடந்துவரும் வெறுப்பைத்தூண்டும் பிரச்சாரத்தின் விளைவே நேற்று முன்தினம் அமெரிக்காவில் கொலைச் செய்யப்பட்ட ஈராக் வம்சாவழியைச் சார்ந்த முஸ்லிம் பெண்மணி ஷைமா அல்வாதி.
’பயங்கரவாதியே நீ உனது நாட்டிற்கு திரும்பிச்செல்!’ என்று எழுதப்பட்ட குறிப்பு ஷைமா தலையில் அடிபட்டு கிடந்த இடத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இன துவேஷத்திற்கு(xenophobia) தனது மனைவி பலியாகிவிட்டதாக ஷைமாவின் கணவர் காஸிம் அல்ஹாமிதி நேற்று முன்தினம் கூறினார்.
தெற்கு ஈராக்கில் அல் ஸமாவா நகரத்தில் இருந்து சதாம் ஹுஸைனின் ஆட்சிக்காலத்தில் சவூதியில் அகதி முகாமிற்கு வந்த இருவரும் அங்குவைத்து திருமணம் செய்துகொண்டனர். ஐந்து குழந்தைகளுக்கு பெற்றோரான இவர்கள் அமெரிக்காவில் குடியேறினர்.
கடந்த புதன் கிழமை காலையில் வீட்டின் பின்புறம் வழியாக கொலையாளிகள் நுழைந்துள்ளனர். கணவர் ஹாமிதி நான்கு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றிருந்தார். மூத்த பெண் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். உணவறையில் இருந்த ஷைமாவின் தலை மற்றும் வலது காது ஆகிய பகுதிகளில் இரும்பு கம்பியை உபயோகித்து கொலையாளிகள் அடித்துள்ளனர். தொடர்ச்சியாக ஐந்து தடவை அடித்துள்ளனர். திடீரென தாக்கப்பட்டதால் சத்தம் போடக்கூட முடியாத நிலையில் மயக்கமடைந்த ஷைமாவை தூக்கத்தில் இருந்து விழித்து வந்து பார்த்த மகள் இரத்த வெள்ளத்தில் கிடப்பத்தை பார்த்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
0 கருத்துரைகள்:
Post a Comment