லக்னோ:சமூகநலத்துறையில் ஊழலுக்கு எதிராக மரணம் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்த ப்ரொவின்சியல் சிவில் சர்வீஸ் அதிகாரியை பலம் பிரயோகித்து போலீஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளது.
ரிங்குசிங் ராகி என்பவரை நள்ளிரவில் போலீசார் போராட்ட இடத்தில் இருந்து அகற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். ராகியை மனநோய்நல பிரிவிலும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளாததால் போலீசாரின் முயற்சி தோல்வியடைந்தது. ராகி பின்னர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று அவரது நண்பர் பிரவீண் தெரிவித்தார். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே ராகியை மருத்துவமனையில் அனுமதித்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் விஜய் பூஷன் தெரிவித்தார்.
ராகியின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும் என்றும், உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ளவும் அரசு கோரிக்கை விடுத்தது. ராகியை பலம் பிரயோகித்து நீக்கம் செய்ததை கண்டித்து அவரது உறவினர்களும், நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்தவேளையில் போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.
அம்பேத்கர் பயிற்சி மையத்தில் ஒருங்கிணைப்பாளராக ராகி பணியாற்றுகிறார். 2008 ஆம் ஆண்டு முதல் முஸாஃபர் நகரில் சமூகநலத்துறை அதிகாரியாகவும் உள்ளார். அன்று ராகி, அங்கு பணியாற்றும் அதிகாரிகள் நடத்திய 40 கோடி ரூபாய் ஊழலை வெளிப்படுத்தினார். இப்பிரச்சனையில் விசாரணைக்கோரித்தான் ராகி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததற்காக தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் கண்ணிற்கும், நாடி எலும்பிற்கும் காயம் ஏற்பட்டதாக ராகி கூறுகிறார். உயர் அதிகாரிகள் இவ்விவகாரத்தில் ஒத்துழைக்கவில்லை. தொடர் நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கோரிக்கை விடுத்தபோதிலும் பதில் கிடைக்கவில்லை என்று ராகி கூறுகிறார்.
0 கருத்துரைகள்:
Post a Comment