கட்ச்:நரேந்திரமோடியின் அரசு என்னையும், எனது சகோதரனையும் வேட்டையாடுகிறது என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா கூறுகிறார்.
குஜராத்தில் அதிகார பரவலாக்கம்(decentralization) அதிகாரம் முழுவதும் ஒரு தனி நபரின் கைகளில் ஒதுங்கியுள்ளது என்றும் பிரதீப் சர்மா குற்றம் சாட்டுகிறார். முன்பு பல்வேறு விவகாரங்களில் மோடி அரசு மீது குற்றம் சாட்டிய ஐ.ஏ.எஸ் அதிகாரி குல்தீப் சர்மாவின் சகோதரர் தாம் பிரதீப் சர்மா.
குஜராத்தில் ஜனநாயகம் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் குரல் எழுப்பாத அளவிற்கு பலகீனமாக உள்ளனர் என்று ஊழல் வழக்கில் கைதாகி ஒரு வருடம் போலீஸ் கஸ்டடியில் இருந்த பிரதீப் சர்மா ஜாமீன் கிடைத்து வெளியே வந்த பிறகு நீதிமன்றத்திற்கு முன்னால் வைத்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறினார்.
கட்ச் கலெக்டராக பணியாற்றிய பிரதீப் சர்மாவின் மீது மோடி அரசு ஏறத்தாழ எட்டு ஊழல் வழக்குகளை சுமத்தியது. எல்லா வழக்குகளையும் மாநில சி.ஐ.டி போலீசார் விசாரிக்கின்றனர். மாநில அரசு குற்றம் சாட்டும் அளவிலான எவ்வித ஊழலையும் நான் புரியவில்லை. வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டேன். 31 ஆண்டுகள் அதிகாரப்பூர்வ வாழ்க்கை களங்கமற்றதாக இருந்தது. தற்பொழுது என் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகள் மாநில அரசின் பாரபட்சமான அணுகுமுறையை விளக்குகிறது என்று பிரதீப் சர்மா கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment