லண்டன்:பரபரப்பான செய்திகளை வெளியிடுவதற்காக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது உள்ளிட்ட முறைகேடான வழிகளை கடைப்பிடித்ததால் சர்ச்சையில் சிக்கிய நியூஸ் இண்டர்நேசனலின் சேர்மன் பொறுப்பில் இருந்து ஊடக முதலை ரூபர் மர்டோக்கின் மகன் ஜேம்ஸ் மர்டோக் ராஜினாமா செய்துள்ளார்.
தி டைம்ஸ், தி சண்டே டைம்ஸ்,தி சன் ஆகிய பத்திரிகைகள் நியூஸ் இண்டர்நேசனலின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னர் தொலைபேசி உரையாடல் ரகசியமாக ஒட்டுகேட்பு விவகாரத்தில் நிறுவனத்தின் சி.இ.ஒ ரெபேக்கா ப்ரூக் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மர்டோக்கின் தலைமை மீடியாவான நியூஸ் கார்ப்பரேசனில் தீவிரமாக பணியாற்றுவதற்காக தனது பதவியை ஜேம்ஸ் ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் கடத்திச் செல்லப்பட்டு கொலைச் செய்யப்பட்ட இளம்பெண்ணின் மொபைல் ஃபோனில் வந்த செய்திகளை ரகசியமாக திருடி பத்திரிகையில் வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து நியூஸ் ஆஃப் தவேர்ல்ட் பத்திரிகை மூடப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment