Thursday, March 1, 2012

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தம்!

Western sanctions tighten squeeze on Iran oil exports
வாஷிங்டன்:ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது.

இந்தியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

அமெரிக்க செனட்டர்களுடன் நடத்திய சந்திப்பில் ஹிலாரி இதனை தெரிவித்தார். ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால் இந்நாடுகளுக்கு எண்ணெய் நெருக்கடி ஏற்படாது என்றும், அமெரிக்கா முன்வந்து மாற்று வழிகளை உருவாக்கும் என்றும் ஹிலாரி கூறினார்.

‘மூன்று நாடுகளுடனும் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இந்நாடுகள் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. நமது அணு வல்லுநர்களும், தூதரக பிரதிநிதிகளும் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். ஈரான் மீது கூடுதல் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.’ என்று ஹிலாரி கூறினார்.

அணுசக்தி துறையில் தனது சாதனையை ஈரான் வெளியிட்டதை தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. கடுமையான தடைகளை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஈரான் மீது விதித்தாலும் ஈரான் அசரவில்லை. சில ஐரோப்பிய நாடுகளுக்கு இனிமேல் எண்ணெய் ஏற்றுமதிச் செய்யமாட்டோம் என்று ஈரான் அறிவித்திருந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza