போபால்:மத்தியபிரதேச மாநில ஜெயில் சூப்பிரண்ட் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் புருஷோத்தம் சோம்குன்வர். இவர் தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், இவரது வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
சோம்குன்வரின் இந்தூர் மற்றும் போபாலில் உள்ள வீடுகளில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரொக்கப் பணம் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஐந்து பங்களாக்கள், மருத்துவமனை, நான்கு கடைகள், ஐந்து இடங்களில் நிலங்கள் ஆகியன இவருக்கு உள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது.
பார்வா, பலாஸி, கம்கேரா ஆகிய இடங்களில் 14 ஏக்கர் நிலம், இந்தூரில் 35 லட்சம் மதிப்பிலான வீடு ஆகியவையும் இவற்றில் அடங்கும். 7.64 லட்சம் ரூபாய் ரொக்கம் வீட்டிலும், வங்கியில் 70 லட்சம் ரூபாயும், 8.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்.ஐ.சி பாலிசியும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment