சியோல்:பஞ்சாப் மாநிலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மின்சாரம் ஏற்றுமதி தொடர்பான பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கு சிறந்த நட்பு நாடு அந்தஸ்த்தை கொடுத்ததற்காக கிலானிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் சியோலில் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில்; இந்தியாவிற்கு சிறந்த நட்பு நாடு அந்தஸ்த்தை கொடுத்ததற்காக கிலானிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும் இந்தியா அந்த அந்தஸ்தை அடைய கிலானி பெருமளவில் ஆதரவு அளித்தார் என்றும் கூறினார்.
மேலும் கிலானி பாகிஸ்தானுக்கு பஞ்சாபிலிருந்து மின்சாரம் அளிக்க கோரிக்கை வைத்தார் என்றும் அதனை தான் பரிசீலிப்பதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தன்னை பாகிஸ்தான் வரும்படி கிலானி அழைத்ததாகவும் கூறியுள்ளார்.
இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பின் போது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவஷங்கர் மேனன் மற்றும் மத்தை ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்ரும் உடன் இருந்தார்.
மேலும் இந்த சந்திப்பில் இந்தியா உடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் மேம்படுத்தும் என்றும் ஆனால் அது சற்று சிரமமான காரியம் என்றும் இருப்பினும் பாகிஸ்தான் அதற்கான முயற்சியை மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்துள்ளதாக மத்தை கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment